மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

507 Views

மயிலத்தமடு-மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு-மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு. பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய குடியேற்றங்களை செய்ய முனைவதாக அப்பகுதி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

253428781 1216882605387336 637921061823680933 n 1 மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

நேற்று சனிக்கிழமை தொடக்கம் பெருமளவான வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் காடுகளை துப்புரவு செய்வதுடன் கொட்டில்களை அமைத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

253839762 930537624229614 5793790436897301080 n மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

குறித்த பகுதியானது பண்ணையாளர்களின் கால்நடை வளர்ப்பு பகுதியாகவுள்ள நிலையில் தொடர்ச்சியாக அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முயற்சி செய்துவரும் நிலையில் அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அப்பகுதியில் எந்தவித அத்துமீறில்களும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad மட்டக்களப்பு: மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

Leave a Reply