ஜப்பானின் அடாமி நகரில் கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் நிலசரிவில் இதுவரை பல பேரை காணவில்லை எனக்கூறப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்றில் மலை உச்சியில் இருந்து பெரும் கருப்பு மணல் மேடு சரிந்து, கடலுக்கு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டு, மண்ணுக்குள் புதைந்துள்ளன.
黄瀬川大橋、崩壊。
熱海で大規模土砂崩れ。
車も家も流される事態に。#豪雨 #拡散希望pic.twitter.com/HX5mKb34zj— 炎上動画・面白ネタ拡散バード🇯🇵 (@enjou_kakusan) July 3, 2021
பாதிக்கப்பட்டவர்களின் இரண்டு உடல்கள் போர்ட் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதாக க்யோடோ செய்தி முகமை தெரிவிக்கிறது.
பசிபிக் கடற்கரையில் பெய்த மிக கன மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.