இலங்கை:உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று ஆண்டுகள் நிறைவு

316 Views

இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர  விடுதிகள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

2019 ஆம் ஆண்டு இன்று போன்றதொரு நாளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக  தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 269 பேரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன், பலர்  படுகாயமடைந்தனர்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை திட்டமிட்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது தொடர்பில் கத்தோலிக்க சபை கடும் அதிருப்தியிலுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply