திருகோணமலையில் துப்பாக்கி முனையில் ஒருவர் கடத்தல்

140 Views

துப்பாக்கி முனையில்

கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்டவர் மனோகரதாஸ் சுபாஷ் (39),திருகோணமலை, வரோதயன் நகரைச் சேர்ந்தவர். மேலும் இவர் 2009ம் ஆண்டு, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.

மேலும் மனோகரதாஸ் சுபாஷ் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மனோகரதாஸ் சுபாஷின் தாயும் மனைவியும் திருகோணமலை மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடதக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply