மாலத்தீவுகள் நாட்டில் ஜனவரி 1, 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தலைமுறை அடிப்படையில், முழுமையான புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக மாலத்தீவு ஆனது.
இனிவரும் இளைய தலைமுறை நாட்டில் புகையிலையைப் பயன்படுத்தவோ, வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது என்று மாலத் தீவு சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.
இந்தத் தடை “புகையிலையால் ஏற்படும் தீங்கிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதற்கான அரசின் வலுவான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று அமைச்சகம் கூறியது.



