341 Views
கந்தரோடை விகாரைக்கு செல்லும் திட்டத்தை கைவிட்ட மஹிந்த
மஹிந்த ராஜபக்ச கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக செல்லவிருந்த தனது திட்டத்தை கைவிட்டுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.
கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார்.