மட்டு-ஊடகவியலாளர்களை கண்டு ஓடிய அமைச்சர் லொகான் ரத்வத்த

718 Views

ஊடகவியலாளர்களை கண்டு ஓடிய

மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஊடகவியலாளர்களை கண்டு ஓடிய சம்பவம் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.

இன்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெர முனவின் அமைப்பாளர் பா.சந்திரகுமாரின் அலுலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த,எஸ்.வியாழேந்திரன் மற்றும் திருகோணமலை மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தல்கள் மத்தியில் மட்டக்களப்பில் சுகாதார துறையினர்  கொரோனா பரவலை தடுப்பதற்கு போராடிவரும் நிலையில், பெருமளவானோர் கலந்துகொண்ட இந்த கூட்டம் தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சம் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டவர்கள், இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும்போது பாராமுகமாக இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply