உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை (20) வெளியிடப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததன.
அத்துடன் வேட்புமனு கோரால் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
அது தொடர்பில் எதிர்ப்புக்கள் இருப்பின் அவற்றை முன்வைக்க ஒன்றரை மணிநேரம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாளைய தினம் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது. அதேநேரம், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்றையதினமும் பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜேர்மன் நாட்டுப் பெண் ஒருவர் களமிறங்குகிறார். இந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜேர்மனிய பெண் செலுத்தியுள்ளார். தனது அரசியல் ஈடுபாட்டின் மூலம் இலங்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.



