இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை திரும்ப பெற்றது லிட்ரோ நிறுவனம்

345 Views

முன்னதாக, இலங்கையில் இன்று (ஏப். 22) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்து லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.

12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலையை 2,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி,12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,175 ரூபா என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்த போதிலும் , விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதையடுத்து, அறிவிக்கப்பட்ட சிலிண்டர் விலை உயர்வை லிட்ரோ நிறுவனம் திரும்ப பெற்றது. அமைச்சரவை முடிவுக்குப் பின்னரே சிலிண்டர் விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply