ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்பு: குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் ஒருவர் கைது

182 Views

ஓமான் ஆட்கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும்  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

துபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வத்தளையை சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் அலுவலகம் ஒன்றை நடத்தி வரும் குறித்த சந்தேகநபர், ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஆட்கடத்தலில் ஈடுபட்ட இரண்டு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply