அயோத்தியில் 50 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மின்குமிழ்கள் திருட்டு 

இந்தியாவின் உத்தரப்பிரதேசத் தின் அயோத்தி நகரத்தில் புதிதாக 200 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட ராமர் ஆலயத்தில் பொருத்தபட்டிருந்த பெருமளவான மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங் கள் கடந்த புதன்கிழமை(14) செய்தி வெளியிட்டுள்ளன.

ராமர் ஆலயத்திற்கு செல்லும்  வழியில் உள்ள மரங்களில் பொரு த்தபட்டிருந்த 3,800 bamboo lights வகை மின்குமிழ்களும், 36 projector lights வகை மின்குமிழ்களும் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட மின்குமிழ்களின் பெறுமதி 50 இலட்சம் ரூபாய்கள்  என மதிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த ஆலயத்தின் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பங்குபற்றியிருந் தார். அவரின் வருகைக்காக இந்த நகர் புனித நகராக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், மின்குமிழ்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அயோத்தி நகரத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு 3.85 பில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தது. அதில் 216 மில்லியன் டொலர்கள் செலவில் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆலயத்தின் திறப்பு விழாவில் ஆரசியல்வாதிகள், வர்த்தகர்கள், சினிமாத்துறையினர் என 8,000 பேர் கலந்துகொண்டிருந்தனனர்.

அயோத்தி பகுதியில் ஐந்து நூற்றாண்டு களாக இருந்த பாபர் மசூதி என்ற பள்ளிவாசலை இந்து தேசியவாதிகளும், இந்திய அரசும் இணைந்து 1992 ஆம் ஆண்டு இடித்து அழித்திருந் தது இங்கு குறிப்பிடத்தக்கது.