18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி- அமைச்சர் சரத் வீரசேகர

Sarath Weerasekara 700x380 1 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி- அமைச்சர் சரத் வீரசேகர

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சியை வழங்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் பயிற்சி வழங்கப் படுவது இளைஞர்களை படை வீரர்களாக்கும் நடவடிக்கை யில்லை என  தெரிவித்துள்ள அமைச்சர், இவ்வாறான பயிற்சி சமூகத்தில் ஒழுக்கத்தை பேணுவதற்கு உதவும் என்றார்.

மேலும் அவர் இது தொடர்பில் கூறுகையில், “நாட்டில் ஒழுக்க நெறியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  சந்தேகம் அல்லது அச்சம் இன்றி வாழ வேண்டும் என்றால் சமூகத்தில் மோசடிக் காரர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் இல்லா நிலை ஏற்பட வேண்டும்.

குழந்தை யொன்று காணாமல் போனால், நாட்டின் சூழ்நிலை காரணமாக குழந்தையின் எதிர் காலத்தை உறுதி செய்ய முடியாத நிலை காணப் படுகின்றது.

18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ பயிற்சி குறித்த யோசனையை நான் பாராளு மன்றத்தில் முன்வைத்த வேளை என்னை கடுமையாக விமர்சித்தனர்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி- அமைச்சர் சரத் வீரசேகர

Leave a Reply