லசந்த கொலை வழக்கு: அடிக்கடி தீர்மானங்களை மாற்றக்கூடாது!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர்  எந்த அடிப்படையில் பரிந்துரை செய்துள்ளார் என லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் இந்த வழக்கில் அடிக்கடி தீர்மானங்களை மாற்றக்கூடாது என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னர் அவர்கள்(சட்டமா அதிபர் திணைக்களம்  ) சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் பின்னர் அவர்களே பிணையில் விடுதலை செய்தனர் என  தெரிவித்துள்ள லால் விக்கிரமசிங்க தற்போது அவர்கள் அவர்களை விடுதலை செய்துள்ளனர்,எப்படி இவ்வாறு தீர்மானங்களை மாற்ற முடியும்?என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் என்பது தனிநபரல்ல,அது ஒரு அரச அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்நோக்கம் கொண்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை வழங்குவதும் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணை என்பதால் சட்டமா அதிபரின் தீர்மானம் குறித்த தனது முடிவை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என லால் விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்ட குற்றங்களிற்கு நீதியை வழங்குவதற்காகவே இந்த அரசாங்கம்  பதவிக்கு வந்தது சட்டமா அதிபரின் தீர்மானம் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.