தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நிலைமைக்கு ஏற்ப, ‘முதலாம் கட்டம்’ மற்றும் ‘இரண்டாம் கட்டம்’ ஆகியவற்றின் கீழ் இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பதுளை மாவட்டம்: பண்டாரவளை, களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட, கண்டி மாவட்டம்: உடபலாத, பாதஹேவாஹெட்ட, கங்க இஹல கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கோஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாத்தளை மாவட்டம்: ரிதிகம, நெலுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மொனராகலை மாவட்டம்: வெல்லவாய, படல்கும்புர,
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை இந்த மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு ‘விழிப்புடன் இருக்குமாறு’ (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



