நிலஅளவை இடம்பெற வேண்டும் – சீன நாட்டவரால் வட்டுவாகலில் குழப்பம்

IMG 0042 resized 2 300x200 1 நிலஅளவை இடம்பெற வேண்டும் - சீன நாட்டவரால் வட்டுவாகலில் குழப்பம்

தென்னிலங்கையில் வசித்து வருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு முல்லைத்தீவில் அமைந்துள்ள கோட்டாபய  கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் குறித்த சீன நாட்டைச் சேர்ந்தவர், நில அளவைக்கு திராக இன்று வட்டுவாகலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரை காலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டயீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச் சிங்களவர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேற வேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்பாட்ட இடத்திலிருந்து குறித்த நபர் வெளியேறியிருந்தார்.

நன்றி – தினக்குரல்

ilakku-weekly-epaper-140-july-25-2021