கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவீட்டு முயற்சி-மக்கள் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில் உள்ள இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரை பரப்பு காணியை கடற்படையினருக்காக அளவீடு இன்று (24) மேற்கொள்ள இருந்த நிலையில் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.