நிதி பற்றாக்குறை – நிகழ்ச்சிகளை குறைக்க பி.பி.சி முடிவு

பிரித்தானியாவின் நிதி நெருக்கடி தற்போது அதன் முன்னனி ஊடகமான பி.பி.சியையும் பாதித்துள்ளது. இந்த வருடத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றக்குறையை சமாளிப்பதற்காக நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை 1000 மணி நேரங்களால் குறைப்பதற்கு பி.பி.சி முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு அது 12,500 மணி நேர நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை மேற்கொண்டிருந்தது. குறைக்கப்படவுள்ள 1000 மணி நேர நிகழ்ச்சிகளில் அரை பங்கு விளையாட்டு மற்றும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளதாக பி.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் பி.பி.சி நிறுவனம் 400 மில்லியன் பவுண்ஸ்களை சேமிக்க திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சி அனுமதி பத்திரத்திற்கான மக்களின் கட்டுப்பணத்தை பிரித்தானியா அரசு அதிகரிக்காது நிறுத்தி வைத்திருப்பது பி.பி.சி நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பிரித்தானியாவின் பண வீக்கமும் தம்மை பாதித்துள்ளதாகவும் பி.பி.சியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உலக நாடுகளில் நடத்தப்படும் பி.பி.சியின் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளையும் குறைக்க அது திட்டமிடப்பட்டுள்ளது. அவை இணையவளி ஊடகங்களாக மாற்றப்படவுள்ளதுடன், பல நாடுகளின் உள்ள சேவைகள் உலக சேவையுடன் இணைக்கப்படவுள்ளன.

பி.பி.சியின் இந்த முடிவால் அதில் பணியாற்றும் பலர் தமது பணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.