சபாநாயகர் தலைமையில், தேசிய சபை இன்று கூடுகிறது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பிலான தெரிவுக் குழு கூட்டமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(29) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தக் கூட்டம் கூடவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.