குருக்கள்மட மனிதப் புதைகுழி: மண்டையோடு உள்ளிட்ட என்புத் தொகுதிகள் காணப்பட்டதாக தகவல்

குருக்கள்மடத்தில் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான  அகழ்வுப் பணிகள் நடைபெற்றபோது மனித எச்சங்கள், நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள், மண்டையோடு உள்ளிட்ட என்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்க முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.

குருக்கள்மடத்தில் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி பகுதியில் இரண்டாம் கட்டத்தின் இறுதிநாள் அகழ்வுப் பணிகள் நேற்று புதன்கிழமை (14) நடைபெற்று முடிந்துள்ளது.

அதன் பின்னர் நேற்றிரவு அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.