கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் திருத்தப்படும்; ஜனாதிபதி இணக்கம்

270 Views

gota 800 கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் திருத்தப்படும்; ஜனாதிபதி இணக்கம்கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும். இதற்கமைய இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

மேலும், திங்களன்று நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டு கொத்தாவலை பாதுகாப்பு கல்லூரி பல்கலைக்கழகம் ஆக்கப்பட்டது. இதன் பின்னர் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற் கொண்டு புதிய விடயங்கள் உள்ளிட்ட அதனை சமர்பிப்பதே இதன் இலக்காகும். இது தொடர்பில் முன்வைக்கப்படும் சகல கருத்துக்கள் தொடர்பிலும் ஜனநாயக ரீதியிலான அரசாங்கம் என்ற ரீதியில் கவனம் செலுத்தப்படும்.

அவற்றை கவனத்தில் கொண்டு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி யளித்துள்ளார். இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதோடு அவை இலங்கையின் சுதந்திர கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் செய்யப்படும்” என்றார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply