இந்தியாவுக்கு எதிராக கென்யாவில் போராட்டம்

கென்யாவின் மிக முக்கிய அனைத்துலக விமான நிலையமான நைரோபி அனைத் துலக விமான நிலையத்தை இந்தியா வின் அதானி நிறுவனம் கையகப்படுத்துவதற்கு எதிராக விமான நிலைய பணியாளர்கள் பணிப்புறக் கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை(11) இடம்பெற்ற இந்த போராட்டத்தால் பல விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதுடன், பயணிகளும் கடும் நெருக்கடிகளை சந்தித்துவருகின்றனர்.

30 வருட குத்தகைக்கு 1.85 பில்லியன் டொலர்கள் பணத்திற்கு இந்த விமான நிலையத்தை கென்ய அரசு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க முன் வந்துள்ளது. இந்த நிதியின் மூலம் விமான

நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன், புதிய ஓடுபாதைகளும் அமைக்கப்படும் என கென்ய அரசு தொவித்துள்ளது.

ஆனால் கென்யாவின் இந்த நடவடிக்கை யினால் விமானநிலையத்தில் பணிபுரியும் பலர் தொழில்களை இழக்க நேரிடும், இந்திய பணி யாளர்கள் அதிகளவு இடங்களை நிரப்பலாம் அது கென்யாவின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என விமானநிலைய தொழில்சங்கம் தெரிவித்துள்ளது. விமானநிலையத்தில் பொருட் கள் மற்றும் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் கென்யாவின் மொத்த வருமானத்தில் 5 விகிதமாகும்.

கென்யாவை விட்டு அதானி வெளி யேறவேண்டும். எமக்கு மாற்று வழியில்லை. எனவே உடன்பாடு கைவிடப்படும் வரையில் போராட்டம் தொடரும் என போரட்டக்குழுவின் தலைவர் மொஸஸ் டீமா தெரிவித்துள்ளார். இந்த விமானநிலையம் 8.8 மில்லியன் பயணிகளையும், 380,000 தொன் பொருட்களையும் 2022 தொடககம் 2023 ஆம் ஆண்டு வரையிலும் கையாண்டுள்ளது.