சுமேரிய நாகரீகத்துடன் தொடர்புடைய உறை கிணறுகள் கீழடியில் கண்டுபிடிப்பு

கீழடியில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட அகழாய்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டு, மீண்டும் மே 20ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மணலூரில் நடத்தப்பட்ட ஆய்வில் சுடுமணல் உலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் அடையாளம் தெரியாத விலங்கின் எலும்பு, சிறு பிள்ளைகளின் எலும்பு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் தண்ணீர்செல்வதற்கான வடிகால் அமைப்புகள் கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, கீழடியில் சுமார் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டறியப்பட்டது. இந்த தொழிற்கூடத்தில் இரும்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நெருப்பு மூலம் பொருட்கள்  தயாரித்தமைக்கான சான்றாக கறுப்பு நிற சாம்பல் துகள்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் கீழடியில் உறை கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆராய்ச்சிகளின் முடிவுகளை கொங்கொங்கைச் சேர்ந்த சித்ரா என்ற ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ளார்.  ஜுலை 2019இல் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் மொத்தமாக 5 உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சேதமடைந்திருந்தது.

keezhadi civilization 1594974520 சுமேரிய நாகரீகத்துடன் தொடர்புடைய உறை கிணறுகள் கீழடியில் கண்டுபிடிப்புஇரட்டைச் சுவருக்கு அருகில் சுமார் 4 அடி உயரத்துடன் காணப்பட்ட உறை கிணறுகளை ஆராய்ச்சி செய்ததில் இருந்து தமிழ் நாகரீகத்திற்கும், சுமேரிய நாகரீகத்திற்கும் தொடர்புகள் இருந்துள்ளமையானது வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்த வேண்டுமாயின் இந்தியாவிலிருந்து டைகிறிஸ் நதிக் கரையில் சிறந்து விளங்கிய சுமேரிய நாகரீகம் இருந்த இன்றைய ஈரான், ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். சுமேரிய நாட்டில் சிறப்பான நாகரீகம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அங்கு நடந்த அகழாய்வுகளின் மூலம் தெளிவாக காணக்கூடியதாக இருந்தது.

கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்னர் பலவிதமான மட்பாண்டங்கள், அணிகலன்கள் போன்ற பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த பொருட்களை வைத்து பல ஆய்வாளர்கள் சுமேரிய நாகரீகத்திற்கும் தமிழர் நாகரீகத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை பல ஆண்டுகளாக தெளிவுபடுத்த முயன்று வருகின்றனர். ஆனால் அதற்கான போதிய ஆதாரங்கள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

keezhadiexcavation 1594974512 சுமேரிய நாகரீகத்துடன் தொடர்புடைய உறை கிணறுகள் கீழடியில் கண்டுபிடிப்புஆனால் தற்போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் சுமேரிய நாகரீகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 1800இற்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுமேரியர்களும் நீர் ஓடும் வடிகால் அமைப்புக்களுக்குப் பதிலாக கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட உறைகிணறு முறையைத் தான் பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை ஆய்வாளர்கள் சிலர் நீர் தேக்கி வைப்பதற்கு இந்த உறைகிணறுகள் பயன்படுத்தப்பட்டன என்று கூறியுள்னர். மற்றொரு சாரார் இதை கழிவு நீர் வடிகால் அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவை பற்றிய முழு விபரங்களும் அறிய கூடுதல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply