ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை – மகிழ்ச்சியில் படைத்தரப்பு

365 Views

காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி சைஃபுல்லா சுட்டுக்கொலை கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் “காவல்துறைக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மிகப்பெரிய வெற்றி” என்றும் காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளதாக கிரேட்டர் காஷ்மீர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்ரீநகர், ரன்ங்ரெத் பகுதியில் ஹிஸ்புல் தளபதி டாக்டர் சைஃபுல்லா மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த பகுதியை படையினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போது திடீரென படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக  மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,“கடந்த மே மாதம் ரியாஸ் நைகூ கொல்லப்பட்டதை தொடர்ந்து சைஃபுல்லா கமாண்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” என்று விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply