391 Views
விபத்தில் முடிந்த தஞ்சக் கோரிக்கையாளர்களின் பயணம்
மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகளை உள்ளடக்கிய படகு மோசமான வானிலை காரணமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், குழந்தைகள் உள்பட 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர்.
ரேடியோ ப்ரீ ஏசியாவின் செய்தியின் அடிப்படையில், இப்படகில் 90 பேர் பயணித்தாகவும் இவர்கள் வங்காள விரிகுடா வழியாக மலேசியாவுக்கு செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த சிலரது உடல்கள் மியான்மரின் ரக்ஹைன் மாநில கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கிறது. மேலும் 50 பேரை காணவில்லை எனச் சொல்லப்படுகிறது.