வவுனியாவில் ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைப்பு

166 Views

ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு

வவுனியாவை சேர்ந்த நவரத்தினம் கபிலநாத் என்ற ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு விசாரணை சமூகமளிக்குமாறு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் வறுமைக்குட்பட்ட மக்களுக்காக உதவும் சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply