ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பின் (JICA) நிதியுதவியுடன் கொழும்பு கோட்டையில் இருந்து மாலபே வரையிலான இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்தை புத்துயிர் பெறுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி அண்மையில் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட JICA நிதியுதவியுடன் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டம் தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் ஜப்பானிய அரசாங்கம் மற்றும் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கை மீளப் பெற முடியுமானால், இந்தத் திட்டம் பற்றிய முடிவு இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்களைப் பொறுத்தே அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.