இலங்கைக்கு கரம் கொடுக்க முன்வந்துள்ள ஜப்பான்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து நடத்தும் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த கலந்துரையாடலில் சீனாவின் பங்கேற்பு தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளது. இதன் மதிப்பு 3.5 பில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.