யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை : மக்கள் எதிர்ப்பு போராட்டம்

யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை : கவனயீர்ப்பு  போராட்டம் – குறியீடு

யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால்  நேற்று  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விகாரைக்கு வருகை தரும் வீதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு!இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே  வெளியேறு! நிறுத்து நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு! நாவற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்! திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து! நாவற்குழி தமிழர் தேசம் !தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு! ஆகிய பதாகைகளை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய உட்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.