யாழ். மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

191 Views

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் யாழ். மாவட்டத்தில் 18 வருடங்களாக கடமையாற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன் , நல்லூர் பிரதேச செயலர் அன்ரன் எழிலரசி மற்றும் யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன் ஆகியோருக்கே இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன.

அதேபோல் யாழ். மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி , சங்கானை பிரதேச செயலர் பொன்னம்பலம் பிறேமினி மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் ஆகியோர் கடமையாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒரே பிரதேச செயலகப் பிரிவில் 6 வருடங்கள் கடமையாற்றியவர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாற்றமும் மாவட்டத்தில் 12 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு மாகாண மட்டத்தில் இடமாற்றமும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான இடமாற்றங்களால் ஒரே தடவையில் பலர் மாகாணத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படவுள்ளது.

இவர்களின் இடத்தை நிரப்புவதற்கு வெளி மாகாணங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்களும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply