குற்றவியல் நீதிமன்றத்தின்; தீர்ப்பை புறந்தள்ள இத்தாலி முடிவு?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ச மின் நெத்தனியாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ட் ஆகியோர் மீது அனைத்து லக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடிவிறாந்தை தாம் காலம் தாழ்த்தப்போவதாக இத்தாலியின் வெளிவிவகார அமைச்ச கம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை(25) இத்தாலியில் இடம்பெற்ற ஜி-7 நாடுகளின் வெளிவிவகார அமைச் சர்களின் கூட்டத்தில் பேசும்போதே இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அன்ரனியோ தஜானி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் முடியும் வரையிலும் நாம் இதனை பின்போடலாம். அனைத் துலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதன் உறுப்பு நாடுகள் கட்டுப்பட வேண்டும் என்றபோதும் அந்த நாடுகள் தமது அரசியல் நலன் களைக் கருத்திற் கொண்டு முடிவுகளை மேற்கொள்ளலாம். அரசியல் வாதிகளுக்கு விதிவிலக்கு அளிப் பது தொடர்பில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் மேற் கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக நீதி மன்றம் கடந்த வியாழக்கிழமை(21) பிடியா ணையை பிறப்பித்திருந்தது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள 124 நாடுகளில் எந்த நாட்டுக்கு இந்த இருவரும் சென்றாலும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் இருவரும் தமது நாட்டில் கால்பதித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என பிரேசில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தாம் கட்டுப்படுவதாக பிரித்தானியா, இத்தாலி, சுவிற்சலாந்து, நோர்வே பெல்ஜியம், சுவீடன், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னர் தெரிவித்திருந்தன.