முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செப்டம்பர் 2 அல்லது 3ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையிலேயே கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கான பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.