இலங்கை நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது இந்தியா அதற்கு உதவுவது இயல்பான விடயம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் என தெரிவித்துள்ளார்.
’’Blood is thicker than water’என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாகயிருப்பதற்கு என்ன செய்யலாம் என இந்தியா சிந்திப்பது இயல்பான விடயமே என அவர் குறிப்பிட்டுள்ளார்
அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற கொள்கையின் பின்னர் அயல்நாடுகள் நெருக்கடியில் உள்ள போது இந்தியா அதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.நீங்கள் ( இலங்கை ) இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவீர்கள் என நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன் ஆனால் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்பது அவசியம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.