இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் விவகாரம் -சீனா மறுப்பு

சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என தெரிவித்துள்ள  சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சீனா எப்போதும் வனவிலங்கு பாதுகாப்பிற்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குகின்றது எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது