இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அது இன்றுவரை தொடரும் நிலையில், காஸாவை முழுமையாக நிர்மூலமாக்குவதே இஸ்ரேலின் குறிக்கோளாக இருக்கிறது.
மேலும் காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் இராணுவம் இறங்கியுள்ளது.
இந்த போரினால், இதுவரை அங்கு 66,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 66,000ஐத் தாண்டியுள்ளது. இறந்தவர்களில் 79 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்று அது தெரிவித்துள்ளது. காஸாவில் 66,005 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 168,162 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.