லெபனானில் உள்ள ஐக் கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினர் மீது திட்டமிட்டவகையில் இஸ்ரேலி யப் படையினர் மீண்டும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக லெபனானில் உள்ள இந்த அமைப்பின் படையினர் கடந்த புதன்கிழமை(16) தெரிவித்துள்ள னர்.
தென் லெபனானில் உள்ள ஐ.நாவின் படை நிலைகள் மீது இஸ்ரேலிய படையினர் மேகாவா டாங்கிகள் மூலம் இந்த தாக்கு தலை மேற்கொண்டுள்ளனர். முன்னர் ஐ.நா அமைதிப்படையின் நிலை கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்தோனேசியா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளின் படையினர் காயமடைந்திருந்தனர்.
இந்த வாரம் இடம்பெற்ற தாக்குதலில் காவல்கோபுரம் மற் றும் கண்காணிப்பு சாதனங்கள் உட்பட பல உபகரணங்கள் சேத மடைந்துள்ளன. லெபனானில் இருந்து ஐ.நா அமைதிப்படையினர் முற்றாக வெளியேறவேண்டும் எனவும், அவ்வாறு வெளியேறாது விட்டால் அவர்கள் உயிரிழக்க வேண்டும் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை(13) இஸ்ரேலி யப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனி யாகு தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஐ.நா படை நிலைகளை இஸ்ரேலியப் படையினர் தாக்கி வருகின்றர். எனினும் ஐ.நா படையினர் லெபனானைவிட்டு வெளியேற மறுத்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் லெபனா னுக்கும் இடையில் உள்ள நீலக் கோடு மற்றும் கோலன் குன்று ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படையினர் வெளியேறுவது தொடர்பான உடன்பாட்டை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு ஐ.நா அமைதிப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டனர். 50 நாடுகளைச் சேர்ந்த 10,000 படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர்.