இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முன்னெடுத்துள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் ஏற்கனவே முயன்றன. ஆனால், ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை காரணமாக இந்த பேச்சுவார்த்தை முயற்சி தடைபட்டது.
இந்நிலையில் கத்தாரில் இஸ்ரேல் குழுவினரை சந்தித்து பேசும் முயற்சியில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து பிரதிநிதிகள் நேற்று ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஹமாஸ் அமைப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல்புதிய கோரிக்கைகளை முன்வைப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இருதரப்பினர் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால் காசாவில் அமைதி நிலவும் என்றும், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ்விடுவிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.