இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் நெதன்யாகு இந்த திட்டம் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி, 48 மணி நேரத்தில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பலஸ்தீன கைதிகளை விடுவிக்கும்.
ஹமாஸ் இராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்படும் என்பதுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் படிப்படியாக காசாவில் இருந்து விலகும். காசா இடைக்கால அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள தீவிர வலதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதேவேளை, இஸ்ரேல் பொதுமக்கள் போரை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.