காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம், போர் நிறுத்தத்திற்கு திரும்புவோம் என அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ரஃபாவில் உள்ள தங்களின் படைகள் மீது தீவிரவாதிகள் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை செலுத்தி தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் பற்றி “எந்த தகவலும் இல்லை” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதாக தெரிவித்துள்ள ஹமாஸ் இஸ்ரேல் அதனை மீறுவதாக கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகளை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் 44 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.