சீனா ஜனாதிபதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?  

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்  சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமீபத்தில் சங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சமீபத்தில் சமர்ஹன்டிற்கு சென்றிருந்த சீன ஜனாதிபதி சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.எனினும் இது குறித்து சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியோ அரச ஊடகங்களோ இதுவரை  எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்திய அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமியும் சீன ஜனாதிபதி  குறித்த தகவலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

ஆராய வேண்டிய  புதிய வதந்திகள்- ஜி ஜின்பிங் சீன தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? அவர் சமீபத்தில் சமர்க்கண்டிற்கு விஜயம் செய்தவேளை அவர் இராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் பின்னர் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்  எனசுப்பிரமணியன் சுவாமி  தெரிவித்துள்ளார்.