ஈரானின் புதிய அதி உயர் தலைவர் காயமடைந்துள்ளார்: அமெரிக்கா

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயமடைந்துள்ளார் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட மொஜ்தபா காமனேயியின் அறிக்கை குறித்து, ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பீட் ஹெக்செத் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் மொஜ்தபாவின் வீடியோ காட்சிகளோ அல்லது ஆடியோ பதிவுகளோ ஏன் வெளியிடப்படவில்லை என்றும் ஹெக்செத் கேள்வி எழுப்பினார்.

“அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். மொஜ்தபா அச்சமடைந்துள்ளார். மற்றும் காயமடைந்துள்ளார். மேலும் அவர் “தலைமறைவாக” இருப்பதாகவும் பீட் ஹெக்செத் குற்றம் சாட்டினார்.

மொஜ்தபா காமனேயியின் முதல் செய்தி ஈரானிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஒரு செய்தி வாசிப்பாளர் காமனேயியின் செய்தியை அந்தத் தொலைக்காட்சியில்  வாசித்தார்.

காமனேயி தனது செய்தியில், “ஹார்முஸ் நீரிணை தடையைத் தொடர்வது” மற்றும் “மினாப் பள்ளி குழந்தைகள் உட்பட தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது” ஆகியவற்றை  தெரிவித்துள்ளார்.