வாஷிங்டன் தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தெஹ்ரான் மீது இராணுவ அழுத்தத்தை தீவிரப்படுத்தி வருவதால், மத்திய கிழக்கில் போருக்கு தயாராகுமாறு அமெரிக்க போர்த் துறை இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கடந்த புதன்கிழமை(11) தெரிவித்துள்ளது.
ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது சாத்தியமான தாக்குதலுக்கான தற்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகள் இருப்பதாக மூன்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உத்தரவை பிறப்பிக்கவில்லை, பென்டகன் சுமார் இரண்டு வாரங்களுக்குள் நிலைநிறுத்த யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை தயார் செய்து வருவதாகவும், இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து சாத்தியமாகும் என்றும் மேலும் திட்டங்கள் மாறக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இரண்டாவது விமானக் கப்பல் USS ஆபிரகாம் லிங்கனுடன் இணைந்தால், இது ஏற்கனவே கூடுதல் போர்க்கப்பல்கள், வான் பாதுகாப்பு மற்றும் போர் படைகளை உள்ளடக்கிய பரந்த அமெரிக்க இராணுவக் கட்டமைபை மேலும் வலுப்படுத்தும்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன், அது முடியாவிட்டால், விளைவு என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி புதன்கிழமை(11) வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மூடிய அறைக்குள் சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் இரண் டாவது சுற்றுக்கான விவரங்கள் இன்னும் இறுதி செய்யப் படவில்லை. கடந்த ஆண்டு ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளின் அதிகாரிகளும் கடந்த வாரம் ஓமானில் முதல் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான அதன் உரிமையை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் குறித்த பேச்சுவார்த் தைகளையும் ஈரான் நிராகரித்துள்ளது. எந்தவொரு அமெரிக்க தாக்குதலும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க தளங்களுக்கு எதிரான தாக்குதலை தூண்டும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.



