அமெரிக்க துருப்புகளின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழி தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் அவர்களுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
“அவர்களை எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், அத்தகைய நடவடிக்கை அவர்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்” என்று டெஹ்ரானில் இருந்து என்பிசி (NBC) செய்திக்கு அளித்த பேட்டியில் அராக்சி கூறினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் நிலவும் நேரத்தில் இந்தப் பேட்டி வெளியாகியுள்ளது.



