இனப் பிரச்னை தீர்வு குறித்துப் பேச மற்றக் கட்சிகளையும் அழையுங்கள் – இந்திய தூதுவரிடம் கஜேந்திரகுமார்

கோரிக்கைகளைபார்க்கிறார்கள். நாம் உயர்ந்த பட்ச கோரிக்கைகளை முன்வைக்கும்போது அரசாங்கம் குறைந்த தீர்வையே முன்வைக்கிறது. விடுதலைப் புலிகள் தனிநாட்டை கோரிய போது சமஷ்டி தீர்வு குறித்து பேசினார்கள். சமஷ்டியை கேட்டபோது 13 என்றார்கள். இப்போது 13ஐ கேட்கின்றபோது 13 மைனஸ் என்றே கூறுகிறார்கள். எனவே, நாம் உயர்ந்தபட்ச கோரிக்கைகளையே முன்வைக்க வேண்டும். தீர்வு குறித்து பேசுவதானால் ஏனைய எமது நண்பர்களையும் (தமிழ் கட்சிகளையும்) அழைக்க வேண்டும்.

பருத்தித்துறை இறங்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் இந்தியா செய்துள்ளது. மயிலிட்டி துறைமுகம் இவ்வாறுதான் புனரமைக்கப்பட்டது. ஆனால், மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தியால் ஏற்பட்ட நன்மைகளை எமது மக்கள் – தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை. சிங்களவர்களே அனுபவிக்கிறார்கள். இந்த நிலையில், இந்திய அபிவிருத்தியின் பெயரால் இன்று 7 ஆயிரம் குடும்பங்கள் திருகோணமலையில் இருந்து அகற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.