சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 14 பேர் தொடர்பில் விசாரணை

மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடுச் செல்ல முற்பட்ட 14 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த குறித்த நபர்கள் ஆட்கடத்தல் காரர் ஒருவரினால் மட்டக்களப்பு சுவிஸ்கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மீட்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 3 சிறார்களும், 5 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டகளப்பு – கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.