செம்மணியில் மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையால் சர்ச்சை!

செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள், தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு ஒன்றின் மூலம் உயிரிழந்த நபர்களுடையதாக இருக்கலாம் என்று மானிடவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்தில் அண்மையில் இடைக்கால அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஆரம்பமான அகழ்வாராய்ச்சிகளின் போது, சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 580 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மனித எச்சங்கள் குறித்து உறுதியான முடிவுக்கு வருவதற்கு, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான மேலதிக தகவல்கள் அவசியமாகவுள்ளதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.