தீவிரமடையும் நெருக்குவாரம் – கோட்டா அரசில் இருந்து 41 உறுப்பினர்கள் வெளியேறினர்

தீவிரமடையும் நெருக்குவாரம்

தீவிரமடையும் நெருக்குவாரம்: கோட்டா அரசுக்கு உள்ளும் புறமுமாக நெருக்குவாரங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தில் இருந்து 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இன்றைய சபை அமர்வில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்படி அரசாங்கத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகுவதாக அறிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தனர்.

இதன்மூலம் 41 உறுப்பினர்கள் அரசில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்பட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.