மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மக்கள் வாகனங்களுடன் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளாந்தம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இன்றைய தினம் மட்டக்களப்பில் மக்கள் எரிபொருளுக்காக அதிகாலை முதலே எரிபொருள் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் கொண்டு தொழில் செய்வோர், எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நீண்ட நாட்களாக தொழிலற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப்பாதிக்கப்பட்டு அக்குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தவனை கடனடிப்படையில் வாகனங்களை பெற்று தொழில் செய்து வருவோர் அவ் வாகனங்களுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.