உக்ரைன்: இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – தூதரகம் அறிவிப்பு

419 Views

எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, இந்திய தூதரகம் அறிவித்துள்ளாது.

இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளில் உள்ள இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல்,உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இந்தியர்களை வெளியேற்ற அண்டை நாட்டு தூதரகங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னறிவிப்பின்றி செல்வோரை எல்லை தாண்ட வைப்பது சிரமமாக உள்ளது.

உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகளுடன் தங்குவது, எல்லை தாண்டுவதுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply