முற்பதிவின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் இந்திய வீசா சேவை

இந்திய வீசா விண்ணப்ப முகவர் நிலையமான IVS, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே வீசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுமென, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இந்திய இந்திய தூதரகம் விடுத்துள்ள  அறிவித்தலின் படி, எதிர்வரும்   04 ஆம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜூலை 04ஆம் திகதி திங்கட்கிழமையும் எந்த விதமான முன்பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகல வீசா விண்ணப்பதாரிகளும் முற்கூட்டியே பதிவுகளை மேற்கொள்ளும்படி வேண்டப்படுவதுடன் மறு அறிவித்தல் வரையில் வீசா விண்ணப்பங்களை மேலே கூறப்பட்ட தினங்களில் மாத்திரம் IVS நிலையத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.