இலங்கை வருகின்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை வருகின்றார் இந்திய பிரதமர்

இலங்கை வருகின்றார் இந்திய பிரதமர்: இலங்கையில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்களா விரிகுடா முயற்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையுடனான தனது உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரு பயணங்களும் பார்க்கப்படுகின்றன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இந்தியாவுக்கான  பயணங்களை முடித்துக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என  தகவல் வெளியாகியுள்ளது.

4ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி மற்றும்  வெளிவிவகாரத்துறை அமைச்சர்  ஜி.எல். பீரிஸ் பிம்ஸ்டெக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிம்ஸ்டெக் என்பது,வங்கதேசம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை கொண்ட பன்னாட்டு அமைப்பாகும். வங்களா விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil News